எங்களை பற்றி

Welcome to Kanyakumari Jawans

தமிழ் தாயின் உறவுகள் அனைவருக்கும் கன்னியாகுமரி ஜவான்ஸ் குடும்பத்தின் அன்பு வணக்கங்கள். கன்னியாகுமரி ஜவான்ஸ் என்பது இந்திய தாய் திருநாட்டின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் இராணுவ மற்றும் துணை ராணுவப்படைகளில் பணியாற்றிவரும் மற்றும் பணி ஓய்வு பெற்ற படைவீரர்களின் கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் புலனகுழு ஆகும். எங்களது இந்த புலன குழுவானது இந்திய பாதுகாப்பு படைவீரர் லெக்ஷ்மண் சஜு அவர்களால் 22/02/2018ல் துவங்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதல் தினத்திலிருந்து நமது தாய்திருநாட்டிர்காக உயிர் தியாகம் செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறந்த மண்ணிற்க்காக வேண்டியும் ஏதாவது செய்ய வேண்டும்,என்ற நோக்கத்தில் பயணிக்கத் தொடங்கியது.


நமது வரலாறு

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதல் நிகழ்ச்சியாக (05/04/2019-அன்று) (Clean & Green) தூய்மை மற்றும் பசுமை மிகு குமரி என்ற நோக்கத்தை முன்நிறுத்தி முதன் முதலாக மாவட்டத்தின் குழித்துறை பகுதி பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையை தூய்மைப்படுத்தும் பணியினைச் செய்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பயன்படுத்தும் நிலையில் புதுப்பொலிவுடன் கொண்டு வந்தோம். அந்த நிழற்குடை அன்று தூய்மை படுத்தியது போலவே இன்றும் முழு தூய்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதும் எங்களுக்கு பெருமை மிக்கதும் ஆகும். அதற்க்கு காரணம் இராணுவ வீரர்களால் தூய்மைப்படுத்தப்பட்ட நிழற்குடை பராமரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவரும் பொதுமக்களே ஆவார். ‍‍‌‍குறிப்பாக அந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், வர்த்தக நண்பர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள். இராணுவ வீரர்களால் செய்யப்பட்ட பணி பராமரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தினந்தோறும் அந்த நிழற்குடை மற்றும் நாங்கள் நட்டு வந்த மரங்களை பராமரித்து வருகின்றனர். ‍‍‍‍‍‍‍அவர்கள் அனைவருக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி செல்ல கடமை பட்டிருக்கிறோம். இவ்வாறாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்குடை, படிப்பகம், அரசுப்பள்ளி வளாகங்கள், மாவட்ட விளையாட்டு அரங்கம், அரசு பொது சுகாதார நிலைகள், அரசு பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னர்கள் காலத்து அரண்மனை மற்றும் புராதன சின்னங்கள் என ஒவ்வென்றாக தூய்மை படுத்தி அருகாமையில் வெறுமனே இருந்த இடங்களில் பசுமைக்காக நிழல் தரும் மரங்களை நட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வந்தோம். ‍ மேலே குறிப்பிட்டது போன்று நாங்கள் பணி செய்த இடங்கள் அனைத்தும் பொது மக்களாலும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதில் நாங்கள் தூய்மை செய்த இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் தவறுதலாக கூட யாரும் ஒட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அரசுப் பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் போது மாணவ மாணவியர் இடையே பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது, தூய்மை மற்றும் பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு தேசப்பற்றை வளர்க்க முடிந்தமைக்கு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதோடு அரசு பொது மருத்துவமனைகள் விளையாட்டு அரங்கம் மற்றும் பொதுச் சொத்துக்களில் புதர் மண்டிக்கிடந்த இடங்களை நாங்கள் தூய்மைப்படுத்தில் அதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு தினசரி பராமரிப்பு பணிகள் எளிமையானதோடு அவர்களது பணியினை மேலும் சிறப்பாக செய்ய ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருந்தது என்பதிலும் பெருமிதம் அடைகிறோம். நாங்கள் செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட விளையாட்டு துறை தலைமை அலுவலர், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள். என அனைத்து உயர்மட்ட அதிகாரிகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எங்களோடு இணைந்து பணி செய்து பசுமைக்காக மரங்களை நட்டுள்ளனர் என்பதும் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம் ஆகும்.


         எங்களது நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் பல்வேறு விதங்களில் வேறுபாட்டுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகவே நடந்துவருகிறது. சாலை விதிகளை மதித்து நடப்பது, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வலியுறுத்துவது, பொது சொத்துக்களை பாதுகாப்பது, இயற்கையை பாதுகாப்பது ஆகியவற்றுடன் தேசப்பற்றுடன் தன்னலமில்லா பொது நலத்துடன் வாழ ஒவ்வொருவரையும் ஊக்கபடுத்துவது நீண்டுகொண்டே போகிறது. இதோடு மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவியரை ஊக்கபடுத்தும் விதத்தில் கடந்த 2019-ம் வருடம் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று மாவட்டத்தின் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடத்தி பெரிய அளவிலான ஊக்க பரிசுகளை வழங்கினோம் இந்த நிகழ்ச்சியில் குழுவின் அனைத்து வீரர்களின் பங்களிப்பும் மிகசிறப்புடன் இருந்தது. இதேபோன்று டிசம்பர் 26 சுனாமி நினைவு தினத்தில் சுனாமியால் பலியானவர்களுக்கு குழச்சல் பகுதியில் விடுமுறையில் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நினைவு அஞ்சலி செலுத்தினோம். இந்த வருடம் பொங்கல் தினத்தன்று அதரவற்றமுதியோர் மற்றும் குழந்தைகள் உடன் குடும்பத்தோடு நேரம் செலவிடும் வாய்ப்பினை அமைத்துக் கொண்டு மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று பொங்கல் இட்டு மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளையும் செய்து அவர்கள் ஆசீர்வாதத்தை பெற்றோம்.

1069

Volunteers

0210

Projects

38

Events

4300

Planted Trees