80-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 08-08-2026 (சனிக்கிழமை) -காலை - முதல் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி அணிகளுக்கான தனித்தனி பிரிவுகளில் மாபெரும் ⚽ கைப்பந்து போட்டிகள் ( VOLLEYBALL )நடைபெறவுள்ளது. 🌟 இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக- ”கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R. Stalin, IPS அவர்கள்.." ☀️துவக்கி வைக்க வருகை தருவதாகஉறுதி அளித்துள்ளார்கள்..🙏 ☄️நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளிலும் நண்பர்கள் அனைவரும் தன்னார்வத்துடன் பங்கேற்று ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..🙏 📢 தங்கள் ஊர் அல்லது அருகிலுள்ள முக்கிய சந்திப்புகளில் ☄️Flex / Banner வைக்க விருப்பமுள்ள நண்பர்கள் குழுவில் தெரிவிக்கவும்... 💕☀️ஒன்றிணைவோம் விளையாட்டை வளர்ப்போம் இளைஞர்களை ஊக்குவிப்போம்! ☀️💕 06-Jul-2026,

எங்களை பற்றி

தமிழ் தாயின் உறவுகள் அனைவருக்கும் கன்னியாகுமரி ஜவான்ஸ் குடும்பத்தின் அன்பு வணக்கங்கள். கன்னியாகுமரி ஜவான்ஸ் என்பது இந்திய தாய் திருநாட்டின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் இராணுவ மற்றும் துணை ராணுவப்படைகளில் பணியாற்றிவரும் மற்றும் பணி ஓய்வு பெற்ற படைவீரர்களின் கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் புலனகுழு ஆகும். எங்களது இந்த புலன குழுவானது இந்திய பாதுகாப்பு படைவீரர் லெக்ஷ்மண் சஜு அவர்களால் 22/02/2018ல் துவங்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதல் தினத்திலிருந்து நமது தாய்திருநாட்டிர்காக உயிர் தியாகம் செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறந்த மண்ணிற்க்காக வேண்டியும் ஏதாவது செய்ய வேண்டும்,என்ற நோக்கத்தில் பயணிக்கத் தொடங்கியது.


நமது வரலாறு

1014

Volunteers

0210

Projects

38

Events

4300

Planted Trees

சமூக ஊடக பதிவுகள்